குவைத்தில் ஒரு இந்தியரின் உடல் வாகனத்திலிருந்து சடலமாக மீட்பு..!!

Dead body of an Indian found in a vehicle. (image credit : The Financial Express)

குவைத்தின் அல் சுலைபியா பகுதியில் இறந்த உடலுடன் ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

குவைத் உள்துறை அமைச்சகத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழிப்போக்கரிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பாதுகாப்பு குழு இருப்பிடத்திற்கு அனுப்பப்பட்டது மற்றும் வழிப்போக்கரிடமிருந்து வழங்கப்பட்ட விளக்கத்தின்படி வாகனத்தில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

ID-யின் படி, அந்த நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்று தடயவியல் சான்றுகள் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms