குவைத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை – குவைத் சுகாதார அமைச்சர்

Dangerous part is 50% of infected people do not show symptoms says health minister.

கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆறு பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் நேற்று (08.04.2020) தெரிவித்துள்ளார்.

மேலும், குவைத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்துள்ள ஆறு பேரும் குவைத்தை சேர்ந்தவர்கள் என்று ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும், இது உலகம் முழுவதும் பேசும் மிகப்பெரிய சவால் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே தங்கியிருக்கவும், அவசியமாக இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் கேட்டுக்கொண்டார்.