குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 10 நபர்கள் குணம்..!

Covid-19; new 10 cases recovered in kuwait.

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 10 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் சனிக்கிழமை (11.04.2020) தெரிவித்துள்ளார்.

தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்