கொரோனா வைரஸ்: 7 நாடுகளுக்கான விமானச் சேவையை நிறுத்திய குவைத்..!

Coronavirus: Kuwait suspends flights to and from 7 countries
Coronavirus: Kuwait suspends flights to and from 7 countries (Image : AFP)

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் குவைத் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை முதல் இந்தியா, எகிப்து, லெபனான், சிரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் குவைத் நிறுத்தியுள்ளதாக குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை குவைத் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏழு நாடுகளில் இருந்து வரும் குவைத் நாட்டு மக்களை தவிர மற்றவர்களுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால் குவைத் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியிருக்கும் என்று சிவில் விமான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.