கொரோனா வைரஸ்; வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாக வதந்திகளை குவைத் மறுப்பு..!!

Kuwait's Public Authority of Manpower dismissed such reports as being 'divorced from reality'. (photo : Gulf News)

குவைத் சமூக விவகார அமைச்சர் மரியம் அல் அகீல் அவர்கள் சமூக ஊடக அறிக்கையான வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் திட்டம் “முற்றிலும் பொய்யானது” என்று தெரிவித்துள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்கள் அமைச்சராகவும் மற்றும் சேவை விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் செயல்பட்டுவரும் அல் அகீல் அவர்கள் செய்திக்குறிப்பில், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், அத்தகைய முடிவை எடுக்கும் நிலையில் அவர் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களை வலியுறுத்தினார்.

சமூகத்தில் குழப்பத்தைத் தவிர்க்க அனைவரும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் சரியான தகவல்களையும் செய்திகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அல் அகீல் கேட்டுக்கொண்டார்.

source : Gulf News