கொரோனா வைரஸ்; குவைத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை..!!

A Kuwaiti police car patrols deserted streets in Kuwait city, on March 23, a day after authorities declared a nationwide curfew amid the COVID-19 pandemic. (photo : gulfnews)

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் ஐந்து பேரை அவசர விசாரணைக்கு அனுப்பியுள்ளதாக குவைத் செய்தித்தாள் அல் கபாஸ் தெரிவித்துள்ளது.

​​குவைத்தை சேர்ந்த 3 பேர், ஒரு வெளிநாட்டவர் மற்றும் வளைகுடாவை சேர்ந்த ஒருவர் ஆகிய ஐந்து பேரும் ஊரடங்கு உத்தரவை வேண்டுமென்றே மீறியது விசாரணையில் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவுப்படி ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 10,000 குவைத் தினார் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.