கொரோனா வைரஸின் எதிரொலி;குவைத்தில் ரமலான் மாதத்தின் இயல்புநிலை பாதிக்கும் வாய்ப்பு..!!

coronavirus crisis....until End of Ramadan. (photo : Arab Times)

குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது, இது ஈரானிலிருந்து பயணம் செய்து வந்தவர்களிடமிருந்து பரவுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து தற்போதுவரை சுகாதார முன்னெச்சரிக்கைகள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக அரசாங்கம் வகுத்துள்ள அவசரத் திட்டம் இவ்வைரஸ் மறைந்து போகும் வரை தொடரும் என்று தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் இறுதியில் தொடங்கவிருக்கும் புனித ரமலான் மாதத்தில் பொதுவாக குடும்பத்தார்கள் , சமூகங்கள் ஒன்றுகூடுவது வழக்கமாகும், ஆனால், இம்முறை இவ்வைரஸின் காரணத்தால் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source : Arab Times