குவைத்தில் முழு ஊரடங்கு காலத்தில் எரிவாயு சிலிண்டர்களை வழங்க கூட்டுறவு சங்கங்கள் முடிவு..!!

Coops to provide gas cylinders during total lockdown period. (photo : Arab Times)

குவைத்தில் சில கூட்டுறவு சங்கங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊரடங்கின் போது தங்களது முக்கிய கிளைகள் மற்றும் பிரதான விற்பனை மையத்துடன் எரிவாயு சிலிண்டர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கூட்டுறவு நிறுவனங்கள் இந்த முயற்சியை எரிவாயு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாயின்மெண்ட் முன்பதிவு செய்து ஷாப்பிங் செய்ய வருபவர்கள், வெற்று (Empty) எரிவாயு சிலிண்டர்களுடன் வந்து மாற்றிக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.