குவைத்தின் கூட்டுறவு அங்காடிகளில் ஊரடங்கு நேரத்தில் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம்..!!

Cooperatives to operate during total lockdown period. (photo : Arab Times)

குவைத் வர்த்தகத்துறை அமைச்சகம் ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் மூலம் குவைத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள வலைத்தளத்தில் கூடுதலாக குவைத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளின் பெயர்கள் சேர்ந்துள்ளது.

இது குவைத்தில் உள்ள குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஷாப்பிங் செய்வதற்கான முன் அனுமதியை பதிவு செய்ய உதவுகிறது.

மேலும், மக்கள் ஊரடங்கு நேரத்தில் கூட்டுறவு நிலையங்களில் ஷாப்பிங் செய்ய தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குவைத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 36 கூட்டுறவு அங்காடிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது அவை :

Al-Faiha, Hadiya, Ishbiliya, Rawda, Al-Zahra, Al-Naeem, Mishref, Hateen, Kaifan, Bayan (block 2), Salmiya, Abu Fatira, Ahmadi, Fahaheel, Riqa (block 4), Dhaher, Fahad Al-Ahmad, Al-Naseem, Mansouriya, Sharq, Daeya, Shaab, Adailiya, Qurtuba, Abdullah Al-Salem, Jabriya (block 2), Nuzha, Ghernada, Shuhada, Salwa, Rabia, Jaber Al-Ali, Al-Ardiya, A-Khalida, Fintas, Farwaniya.

இதற்காக நீங்கள் www.moci.shop என்ற தளத்தில் சென்று பின்வரும் உங்கள் தகவல்களை கொடுத்து பதிவு செய்து LOGIN செய்யவும்.

1-Select the preferred language.
2- Enter your civil ID number.
3- Enter your civil ID serial number.
4- Enter your name.
5- Enter your district.
6- Enter your cell phone number.
7- Enter your e-mail address.
8- Choose the market.

photo : kuwait Local

நீங்கள் தளத்தை LOGIN செய்து 30 நிமிடங்கள் மட்டுமே பொருட்கள் தேர்வு மற்றும் Order செய்வது உள்ளிட்டவை செய்வதற்கும் அனுமதி அளிக்கபட்டும்.

Order முடிந்தவுடன் கடைக்காரரின் email இருந்து இரண்டு பார்கோடுகள் அனுப்பப்படும், அதில் ஒன்று ஊரடங்கு உத்தரவின் போது நீங்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கிறது, மற்றொன்று கூட்டுறவு அங்காடிகளில் நீங்கள் பொருட்கள் Order செய்ததன் தகவலை உறுதிப்படுத்தும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.