குவைத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு 30ஆம் தேதி முடிவடைகிறது; பகுதி நேர ஊரடங்கிற்கு மாற வாய்ப்பு..!!

Complete curfew ends on 30th; Partial lock-down to continue. (photo : Arabian Bussiness)

அமைச்சர்கள் சபை நேற்று (மே 25) நடந்த கூட்டத்தில், குவைத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முழுமையான ஊரடங்கு உத்தரவின் விளைவு குறித்து விவாதித்தது. மேலும், முழு ஊரடங்கு உத்தரவு மே 30ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 30 சனிக்கிழமையன்று முடிவடையவுள்ள முழு ஊரடங்கு உத்தரவையும் குவைத் அரசு நீட்டிக்காது என்றும், சாதாரண வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு வழி வகுக்க பகுதி ஊரடங்கு உத்தரவுக்கு மாறும் என்று துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல்-சலே திங்களன்று அறிவித்தார்.

பகுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் அடுத்த கட்டத்திற்கான நடைமுறைகள் குறித்த விவரங்கள் இந்த வியாழக்கிழமை விரிவாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் தொழிலாளர்களுக்கு தனியார் வீட்டுவசதி வழங்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளுடனும், பொருத்தமான சுகாதாரத் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் அமைச்சரவை அனைத்து தனியார் நிறுவனங்களையும் கட்டாயப்படுத்தி கேட்டுக்கொண்டது.