கொரோனா வைரஸின் எதிரொலி;வெளிநாடுகளில் உள்ள மக்களை நாடுதிரும்ப குவைத் வலியுறுத்தல்..!!

Come home … stay home asked by kuwait government.

வெளிநாட்டில் இருக்கும் குவைத் நாட்டினரை குவைத் திரும்புமாறு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸின் அபாயங்களைத் தவிர்ப்பதற்கும், வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப குவைத் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி அமைச்சரவை கேட்டுக்கொண்டது.

புதிதாக தற்போது 17 நபர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

source : Arab Times