சீனாவில் COVID-19 கொரோனா வைரஸ்; இறப்பு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு..!

COVID-19 death toll
Death toll in China COVID-19 epidemic surges past 1,500

சீனாவின் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) நிலவரப்படி 1,500 ஆக உயர்ந்துள்ளது. இதில் தொற்று நோய் மையமாக திகழும் ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேர் இறந்துள்ளனர்.

COVID-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,420 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் பாதி எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹூபே தலைநகரான வூஹானில் முதன்முதலில் தோன்றிய இந்த தொற்று வெடிப்பில் குறைந்தது 1,519 பேர் இறந்துள்ளனர், மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த கிருமித்தொற்று நாடு தழுவிய அளவில் அதிவேக வளர்ச்சி பெற்றது.

இதில் 66,000க்கும் அதிகமானோர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர், பெரும்பாலான மரணங்கள் ஹூபேயில் நிகழ்ந்துள்ளன. மேலும், மருத்துவ சிகிச்சை அளித்த 1,716 மருத்துவ ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் நோயால் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.