குவைத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகிக்கப்படும்..!!

The Minister of Social Affairs and Minister of State for Economic Affairs Maryam Al-Aqeel. (photo : Arab Times)

சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்துடன் அரசாங்க நிறுவனங்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் சில உணவுப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் செயல்முறையை நிறைவு செய்துள்ளன, காய்கறிகள் குவைத் தொண்டு நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு, அவை துயரமடைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும், குறிப்பாக குவைத்தில் கொரோனா நெருக்கடி காரணமாக வேலைவாய்ப்பு இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விவகாரங்கள், நகராட்சி விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் தலைமையிலான அரசு நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் இந்த காய்கறிகளை ஒப்படைப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு செயல்முறை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விவகார அமைச்சரும் மற்றும் மாநில பொருளாதார விவகாரங்கள் அமைச்சருமான மரியம் அல்-அகீல் அவர்கள் பத்திரிகை அறிக்கைகளில், சில பொருட்கள், குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் இல்லாததால் அரசாங்க நிறுவனங்கள் நுகர்வோரிடமிருந்து பல புகார்களை தொடர்ந்து பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.