PCR மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக வழங்குவதை குவைத் இடைநீக்கம்..!!

Cabinet suspends coronavirus free certificate for arrivals. (photo : Arab Times)

இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து வரும் பயணிகள் PCR மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக வழங்குவதை குவைத் அமைச்சரவை வியாழக்கிழமை மாலை இடைநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும் என்று குவைத் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழைப் பெறுவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் அடிப்படையில், இந்த முடிவை வாபஸ் பெறுமாறு சிவில் ஏவியேஷன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வளர்ந்து வரும் கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை வழங்கவும் அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.

source : Arab Times