குவைத்தில் ரொட்டி (bread) மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர்களுக்கு விநியோகம் – மேஜர் ஜெனரல் Faraj Al-Zoubi

Major general Faraj al-zoubi,Assistant Undersecretary for Public Security Sector at the Ministry of Interior. (photo : MENAFN)

உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்புத் துறைக்கான உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் Faraj Al-Zoubi அவர்கள், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரின் தேவைகளை, குறிப்பாக ரொட்டி (bread) மற்றும் எரிவாயு சிலிண்டர்களை இந்தத் துறை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய Al-Zoubi அவர்கள், ரொட்டி மற்றும் எரிவாயு போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அமைச்சகம் மாவு ஆலைகள் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

காலையிலும் மாலையிலும் இந்த பொருட்களின் சுமூக விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

பல பகுதிகளில், குறிப்பாக Jleeb Al-Shuyoukh, Khaitan, Mahboula மற்றும் Bneid Al-Qar ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்வதன் மூலம் வரும் நாட்களில் நாங்கள் தொடர்ந்து விநியோகிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.