குவைத்தில் வங்கிகள் தங்கள் கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் திறக்காது..!!

Banks will not start opening their branches from Sunday. (photo : IIK)

குவைத்தில் உள்ள வங்கிகள் அடுத்த மே 31 ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கிளைகளை மீண்டும் திறக்காது என்று தெரிவித்துள்ளது.

மேலும், அதற்கு பதிலாக தங்கள் வங்கி சேவைகளை மின்னணு சேவைகள் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று குவைத் வங்கி சங்கம் தெரிவித்துள்ளது.

கிளைகள் வாடிக்கையாளர்களைப் பெறாது மற்றும் வங்கிகளுக்கு இடையில் உள்ளூரில் நிதி பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இடமாற்றம் செய்தல், ஏடிஎம்கள் மூலம் பணத்தை வழங்குதல், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் வாடிக்கையாளர் விசாரணைகளைப் பெறுவது உட்பட அனைத்து சேவைகளும் ஆன்லைனில் தொடரும் என்று தெரிவித்துள்ளது.