குவைத்தில் மர்மமான முறையில் இறந்த இந்திய இளைஞர்; தடயவியல் ஆய்வில் இறப்பிற்கான காரணம் வெளியீடு..!!

An kerala expat died in kuwait due to drug additive. (photo : Indian express)

குவைத்தில் ஒரு கேரளாவை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்த செய்தி குவைத்தில் உள்ள பல செய்தி தளங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது தடயவியல் ஆய்வில் அவர் போதைப்பொருள் அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக இறந்ததாக தடயவியல் அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அவர் பாலக்காடு, திரிதால திருமட்டகோடு, கருக்காபுதூரைச் சேர்ந்த உவைஸ் (26), இவர் ஃபர்வானியா மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தின் ஆர்டியா பகுதியில் ஓட்டுநரான பணிபுரிந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலுள்ள வீட்டில் உள்ளூர் நண்பரான இஸ்மாயிலுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, வாந்தியெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உடனடியாக ஃபர்வானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அனால் மருத்துவர்கள் பரிசோதனையில் சம்பவ இடத்திலேயே இவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடலை அதிகாரிகள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதே மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இறந்த உவைஸின் நண்பரான இஸ்மாயிலை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தது.

மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் பல சிகரெட் துண்டுகள் மற்றும் அறியப்படாத பொருட்கள் நிரப்பப்பட்ட சிகரெட்டுகள் காணப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த உவைஸ், குவைத்தில் ஒரே வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08