குவைத்தில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

An Indian Expat commit suicide by Hanging in kuwait.

குவைத்தில் வேலைக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம்
அயலக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் புலிக்காட்டர பிரகாஷ் (45 வயது).

இவர் குவைத்தின் Sabah-Salem பகுதியில் Block-3-யின் ஒரு குடியிருப்பின் அடித்தளத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் முன்பு சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார் எனவும், குவைத்திற்கு வந்து 5 மாதங்கள் ஆகிறது எனவும், இங்கு முகவர் மூலம் வந்து ஒரு வழியாக விசா நடைமுறைகளை முடித்த பின்னர், அவர் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக வேலை தேட முடியவில்லை எனவும், வேலை எதவும் இல்லாமல் அறையிலேயே இருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இவருக்கு சபிதா என்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகளும் உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியவில்லை.