குவைத்தில் தமிழக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

An Indian expat commit suicide by hanging in kuwait. (photo : Timesnow)

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (29), இவர் Mina Abdullah பகுதிகளில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி ஓட்டுநராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தான் தங்கியிருந்த அறையில் உடன் வேலை செய்யும் நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 7 வருடங்களாக குவைத்தில் வேலை செய்து வருகிறார் எனவும், இவர் தாயகம் திரும்புவதற்கு ஒவ்வொரு பொருட்களாக வாங்கி வைத்த வண்ணம் காணப்பட்டார் என்றும், தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றும், இது தங்களுக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறை, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.