குவைத்தில் இந்தியாவை சேர்ந்த ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!!

An Indian driver commited suicide by hanging in kuwait. (photo : arab times)

குவைத்தில் ஓட்டுநராக பணிபுரியும் வீட்டு உதவியாளர் ஒருவர் சபா அல் சலீம் பகுதியில் இன்று (ஜூலை 08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அழைப்பு வந்துள்ளது, அதில் அவர் தன்னிடம் ஓட்டுநராக பணிபுரிபவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

உடனடியாக பாதுகாப்புப் படையினரும், துணை மருத்துவர்களும் வீட்டை அடைந்த பின்னர், அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

பரிசோதனையின் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08