குவைத்தில் இந்தியர் ஒருவர் 29 மாடி உயரத்திலிருந்து குதித்து தற்கொலை..!!

An indian commit suicide by jumping from Tower in kuwait. (photo : The Economic times)

குவைத்தின் Salihiya பகுதியில் உள்ள ஒரு கோபுரத்தில் 29 வது மாடியில் இருந்து குதித்து ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணையின் போது அவர் கோபுரத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து முதல்கட்ட ஆரம்ப அறிக்கை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சம்பவம் தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று பதிவாகியுள்ள மூன்றாவது தற்கொலை வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.