குவைத்தில் பொது மன்னிப்பு காலம் முடிவடைந்தது; 23,500 பேர் பதிவு..!!

Amnesty period ends - 23,500 residence violator register for amnesty. (photo : Arab Times)

துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான Anas Al-Saleh அவர்களின் முடிவின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முழுவதும் குவைத்தில் உள்ள அனைத்து தேசிய மக்களுக்காக நடத்தப்பட்ட ஆவணமற்ற வெளிநாட்டினருக்கான பொது மன்னிப்பை உள்துறை அமைச்சகம் முடித்துக்கொண்டது.

குடியிருப்பு மீறலில் ஈடுபட்டவர்களுக்கு Jleeb Al Shuyoukh மற்றும் Farwwaniya உள்ள பொது மன்னிப்பு மையங்களில் வந்து பதிவு செய்ய போதுமான நேரம் வழங்கப்பட்டது என்றும், குவைத்தின் செலவில் எந்தவொரு அபராதமும் செலுத்தாமல் இலவசமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்கள், பெண்கள் என சுமார் 23,500 நபர்கள் இந்த பொது மன்னிப்பின் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பின் கடைசி நாளில், Jleeb Al Shuyoukh மற்றும் Farwwaniya பகுதிகளில் உள்ள நான்கு மையங்களுக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mahboula பகுதியின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் Jleeb Al Shuyoukh பொது மன்னிப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.