குவைத்திலிருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட தமிழர்களுடன் 4வது விமானம் நாளை திருச்சிக்கு புறப்படவுள்ளது..!!

Amnesty indians to land in india from Kuwait tomorrow. (photo : Arabian Bussiness)

குவைத்திலிருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட தமிழர்களுடன் 4வது விமானம் நாளை திருச்சிக்கு புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை சனிக்கிழமை (ஜூன் 13) காலை விமானம் தமிழகம் திருச்சிக்கு புறப்பட்டு வரும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூன் 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மூன்று குவைத் ஏர்வேஸ் விமானம் பொதுமன்னிப்பு இந்தியர்களுடன் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான பயணச்சீட்டு உள்ளிட்ட அனைத்தும் குவைத் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.