குவைத்திலிருந்து தமிழர்களுடன் திருச்சிக்கு விமானம் புறப்பட்டது …!!

Amnesty indians fly to trichy today.

குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் உள்ள தமிழர்கள் 120 பேர் சற்றுமுன் தமிழகம் (திருச்சிராப்பள்ளி) புறப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்று முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களில் முதற்கட்டமாக 120 பேருடன் (10 பெண்கள் உட்பட) விமானம் தமிழகம் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் ஏர்வேஸ் (1611) விமானம் Terminal 4ல் இருந்து இன்று காலை 9:30 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் புறப்பட்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

குவைத் அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச விமானம் மற்றும் இலவச விமான டிக்கெட் அடிப்படையில் பொது மன்னிப்பு பெற்று முகாம்களில் உள்ள தமிழர்கள் தாயகம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

விமானத்தில் பயணம் செய்த நண்பர்கள் குவைத் அரசிற்கும், குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.