குவைத் அமீரின் உடல்நலம் குறித்து கத்தார் அமீர் தொலைபேசியில் நலம் விசாரித்தார்..!!

Amir checks on health of Kuwait Amir. (image credit : The Peninsula)

குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நேற்று (ஜூலை 18) சனிக்கிழமை அன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அமிரி திவான் விவகார அமைச்சர் ஷேக் அலி ஜர்ரா அல்-சபா அவர்கள், அமீர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், குவைத் தலைவரின் தொடர்ச்சியான செழிப்பு மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் தொலைபேசி வாயிலாக குவைத் அமீரிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத் அமீர் அவர்கள் செழிப்புடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிராத்திப்பதாக கத்தார் அமீர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms