குவைத்தில் ராவ்டா மற்றும் ஹவாலி கூட்டுறவு சங்கத்தின் தொழிலாளர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்..!!

Al Rawda and Hawali co-operative store worker infected by corona virus.

ராவ்டா (Rawda) மற்றும் ஹவாலி (Hawalli) கூட்டுறவு சங்கத்தில் காய்கறி பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்பட்டவரின் முடிவுகள் பாசிட்டிவ் (positive) என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவருடன் தொடர்புக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தவும், முழு சந்தைக்கும் அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.