குவைத்தில் முழு ஊரடங்கின் எதிரொலி; ஒரே நாளில் 86,000 மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை..!!

86,000 gas cylinders sold in a day - a record level consumption. (photo : Arab Times)

குவைத்தில் முழு ஊரடங்கு இன்று (மே 10) மாலை 4 மணிக்கு தொடங்குவதின் எதிரொலி; சனிக்கிழமை (மே 9) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வு குவைத் முழுவதும் 76 கிளைகளில் உள்நாட்டு நுகர்வுக்காக 86,000 மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையாகி சாதனை அளவை எட்டியுள்ளது.

குவைத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் முன்னால் மக்கள் கூடியதாக கூறப்படுகிறது, அன்றாட தேவைகளை ஈடுகட்ட எரிவாயு மற்றும் பெரிய பங்குகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் எளிதாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் எரிவாயு சிலிண்டர்களின் உள்நாட்டு சந்தையின் நுகர்வு ஒரு நாளைக்கு 50,000 சிலிண்டர்கள் ஆகும், ஆனால் இன்று நுகர்வு ஒரு பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நுகர்வு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குவைத் ஆயில் டேங்கர்ஸ் நிறுவனம் இதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.