குவைத்தில் மூடப்பட்ட மருந்தகங்களில் 7 மருந்தகம் மீண்டும் திறக்கப்பட்டன..!!

Ministry inspectors closing violating pharmacies. (photo : Arab Times)

கொரோனாவைச் சமாளிப்பதற்கு தேவையான அணைத்தும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மருந்தகங்கள், கிடங்குகள் மற்றும் சந்தைகளின் ஆய்வு தொடர்ந்து நடக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆய்வுக் குழுக்கள் நேற்று 61 மருந்தகங்களைத் ஆய்வுசெய்தது மற்றும் ஹாட்லைன் எண் (135) மூலம் 250 புகார்களைப் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு நாட்களில் மூடப்பட்ட 22 மருந்தகங்களில் 7 மருந்தகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றின் மீறல்களை ஏற்றுக்கொண்டு, அமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக உறுதியளித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மீறல்களை ஏற்றுக்கொள்ளாத மருந்தகங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன.

சில மருந்தகங்களில் பணிபுரியும் விற்பனையாளரால் விலை உயர்த்தப்பட்டதாகவும் மற்றும் விலைப்பட்டியல் வழங்கவில்லை போன்ற புகார்கள் வந்துள்ளது.

ஆய்வுக் குழுக்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு மீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்தது.

source : Arab Times