உலக நாடுகளிலிருந்து குவைத் வரவிற்கும் குடிமக்களை பரிசோதிக்க 600 மருத்துவர்கள் நியமனம்..!!

600 Doctors geared up for overseas kuwaitis.

உலக நாடுகளிலிருந்து குவைத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் குவைத் குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய பல்வேறு நிபுணத்துவங்களைச் சேர்ந்த சுமார் 600 மருத்துவர்கள் தீவிரமாக பயிற்சி பெற்றுள்ளனர் என்று சுகாதார அதிகாரி வியாழக்கிழமை (16.04.2020) தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் விமானங்களின் மூலம் திரும்பி வரும் குடிமக்களை ஆய்வு செய்ய குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈடுபட உள்ள மருத்துவ குழுக்களுக்கான சுகாதார பட்டறைகள் மற்றும் சிறப்பு விரிவுரைகளை சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது என்று அந்தத் துறையின் தலைவர் பஹத் அல்-கம்லாஸ் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய, அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் (COVID -19) பரவியதைத் தொடர்ந்து 35,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு குவைத் குடிமக்கள் நாடு திரும்பத் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.