கொரோனா வைரஸின் எதிரொலி;குவைத் மக்கள் இத்தாலியிலிருந்து வெளியேறினர்..!!

53 Kuwaitis evacuated from Italy. (photo : Arab Times)

கொரோனா வைரஸ் (Covid 19) பரவுவதின் காரணமாக இத்தாலியின் குவைத் தூதரகத்தின் உதவியுடன் இத்தாலிய தலைநகரான ரோம் நகரிலிருந்து வெளியேற விரும்பிய ஏராளாமான குவைத் குடிமக்களை குவைத் ஏர்வேஸின் தனியார் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டனர்.

Chargé d’Affaires சமி அல்-ஜமனன் அவர்கள் செய்தியாள்களிடம் கூறுகையில், தூதரகத்தை தொடர்புகொண்டு நாடுதிரும்ப விரும்பிய 53 குவைத் மக்களை குவைத் ஏர்வேஸின் சிறப்பு விமானம் மூலம் ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும், இன்று விமானத்தில் புறப்படாத குவைத் மக்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அல்-ஜமனன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுவருவதை தொடர்ந்து உலகின் பல நாடுகள் இத்தாலிக்கு வந்து செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இதுவரை 650 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இன்று காலை நிலவரப்படி 17 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times