இந்தியா உட்பட பல நாடுகளுக்கு 32 விமானங்களில் 6,180 வெளிநாட்டினர்கள் குவைத்திலிருந்து புறப்பட்டனர்..!!

32 flights to exit Kuwait today with 6,180 expats. (photo : TimesKuwait)

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இன்று (ஜூன் 10) புதன்கிழமை பல நாடுகளுக்கு, குறிப்பாக எகிப்துக்கு, கத்தார், இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 32 விமானங்களில் சுமார் 6,180 வெளிநாட்டினர் புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சூழ்நிலைகள் பணிநீக்கங்கள் முதல் சம்பள வெட்டுக்கள் வரை வாழ்க்கையை கடினமாக்கியுள்ளதால், DGCA குவைத் விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் தனது செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.

இன்று அதிகபட்சமாக 6,180 வெளிநாட்டினர்கள் இந்தியர்கள் உட்பட தங்களது நாட்டிற்கு குவைத் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.