குவைத் விமான நிலையத்தில் வணிக (commercial) விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

3 stage return plan for commercial flights at Kuwait Airport from August 1. (photo : IIK)

குவைத்தில் ஆகஸ்ட் 1, 2020 முதல் குவைத் விமான நிலையத்தில் வணிக (commercial) விமானங்களை இயக்குவதற்கான 3 கட்ட திட்டத்திற்கு குவைத் அமைச்சரவை இன்று (ஜூன் 29) ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் கூறுகையில், இந்த விமானங்கள் 30%க்கும் அதிகமான விகிதத்தில் இயக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க குவைத் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக மார்ச் 11 அன்று குவைத் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08