குவைத்தில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மூன்று இந்தியர்கள் கைது..!!

3 Indians held gambling in garden of the Sheraton Roundabout.

சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சல்ஹியா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் Sheraton ரவுண்டானாவின் தோட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டுகொண்டுருந்தனர் அப்போது அங்கு போலிசார் நெருங்கி வருவதைக் கண்ட அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் துரத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும், சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் 56 தினார் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

source : arab times