குவைத்தில் சம்பளம் பெறாததற்காக வெளிநாட்டவர்கள் போராட்டம்; 12 பேர் கைது..!!

12 expats arrested for protesting. (photo : Kuwait Local)

குவைத் பாதுகாப்பு அதிகாரிகளை தவறாக பேசியதற்காக 12 எகிப்திய வெளிநாட்டவர்களை பாதுகாப்புத் துறை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் அன்பா அரபு நாளிதழின் படி, சுமார் 60 வெளிநாட்டினர் கூட்டம் ஒன்று கூடி பல மாதங்களாக சம்பளம் பெறாத காரணத்திற்காக அபு ஃபாத்திராவில் உள்ள மனிதவளத் துறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் போராட்ட இடத்திற்கு வந்தபோது, ​​வெளிநாட்டவர்கள் அரசாங்க ஒப்பந்தங்களுடன் பணிபுரிந்து வருவதையும், அவர்களின் சம்பளத்தைப் பெறவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

முபாரக் அல்-கபீர் கவர்னரேட்டின் பிரிகேடியர் ஜெனரல், பிரிகேடியர் ஜெனரல் முபாரக் மர்ஜி ஆகியோர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து வந்த புகார்களைக் கேட்டு, இந்த விவகாரம் குறித்து மனிதவள அதிகாரசபையிடம் தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தங்கள் இடத்திற்குத் திரும்புவதற்காக ஒரு பஸ் ஓன்றை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08