குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் 11 பேர் பாதிப்பு..!!

11 new cases detected in kuwait. (photo : Arab Times)

குவைத்தில் கொரோனா வைரஸால் (COVID-19) மேலும் 11 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 159 பேரில் 22 பேர் குணமாகியுள்ளனர் மற்றும் 137 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Dr. அப்துல்லா அல் சனத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் ஐந்து பேர் ICUவில் உள்ளதாகவும், சுமார் 574 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

source : Arab Times