கனடாவின் பிரதமர் இரண்டுநாள் பயணமாக குவைத்திற்கு வருகை..!!

Canadian Prime Minister Justin Trudeau in a meeting with HH the Amir Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah at Bayan Palace in Kuwait. (image credit :ArabTimes)

கனடாவின் பிரதமர் Justin Trudeau அவர்கள் செவ்வாயன்று குவைத்திற்கு புறப்பட்டார். பிரதமரின் திவான் ஆலோசகர் ஷேக் டாக்டர் சலீம் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா அவர்கள் அவரை குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்.

கனடாவின் பிரதமர் Justin Trudeau அவர்கள் பிரதமர் ஷேக் சபா கலீத் அல் ஹமாத் அல் சபா அவர்களை சந்தித்தார். அப்போது ​​இரு தரப்பினரும் நல்ல உரையாடல்களைப் பரிமாறிக் கொண்டதோடு, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளையும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் ஷேக் டாக்டர் சலீம் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபாவின் அமைச்சரவையின் ஆலோசகர், துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் அகமது மன்சூர் அல்-சபா, வெளியுறவு அமைச்சர் ஷேக் டாக்டர் அஹ்மத் நாசர் அல்-சபா மற்றும் வெளியுறவு துணை அமைச்சர் கலீத் அல்-ஜரல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பிரதமர் அலுவலகத்தின் தலைவர் ஷேகா எட்மட் அல்-கலீத் அல்-அஹ்மத் அல்-சபா, குவைத் இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது கலீத் அல்-காதர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் விருந்தினர் மற்றும் அவருடன் வந்த தூதுக்குழுவிற்கு பிரதமர் அவர்கள் இரவு விருந்தை ஏற்பாடுசெய்திருந்தார்.

Source : Arab Times