குவைத்தில் பிறந்த இந்திய இளைஞர் ஐரோப்பிய T10 கிரிக்கெட்டில் “மாஸ்டர் பிளாஸ்டர்” பட்டம் வென்று சாதனை..!!

Kuwait master blaster cricket
Photo credit : IIK

குவைத்தில் பிறந்த 22 வயதான இந்திய இளைஞர் கெவின் கிறிஸ் டிசோசா ஐரோப்பிய டி10 கிரிக்கெட்டில் “மாஸ்டர் பிளாஸ்டர்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் நார்பர்ட் டிசோசா மற்றும் கிளெரா நோரோன்ஹா ஆகிய தம்பதிகளுக்கு பிறந்தவர் ஆவார்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

டிசோசா உடைய மூத்த சகோதரி நிக்கோல் டிசோசா ஐக்கிய நாட்டில் பணிபுரிகிறார்.

இவர்கள் இந்தியாவில் உள்ள உதய்ப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய டி10 கிரிக்கெட் லீக் போட்டித் தொடரில் பல்கேரியாவின் சோபியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்த போட்டியில் 19 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் மொத்தமாக 198 ரன்களை அடித்துள்ளார்.

அங்குதான் அவருக்கு “மாஸ்டர் பிளாஸ்டர்” என்ற மதிப்புமிக்க பட்டம் அறிவிக்கப்பட்டது.

குவைத்தின் ஐக்கிய இந்திய பள்ளியில் ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்விச் சான்றிதழை மிகச் சிறந்த சதவீதத்துடன் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, பள்ளிப்பருவத்தில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பல்கேரியாவில் உள்ள சோபியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.

அவர் பல்கேரியாவுக்கு வந்தபோது, ​​பல்கலைக்கழக கிரிக்கெட் அணியில் சேர்ந்து கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தைத் தொடர்ந்துள்ளார்.

அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சிறிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

மேலும், விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார்.

கெவின் கிறிஸ் டிசோசா உண்மையிலேயே “மாஸ்டர் பிளாஸ்டர்” என்ற பட்டத்திற்கு தகுதியுடையவர்
என்று தெரிவித்துள்ளது குறிபிடதக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter