குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மசூதிகளில் மீண்டும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது..!!

Worshipers perform friday prayers at mosques 1st time since virus outbreak. (image credit : KUNA)

கொரோனா வைரஸ் குவைத்தில் பரவ தொடங்கியதிலிருந்து அனைத்து வழிபாட்டு தளங்ககளும் மக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய (ஜூலை 17) தினம் மீண்டும் வெள்ளிக்கிழமை (jummah) தொழுகைக்காக மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

Worshipers perform friday prayers at mosques 1st time since virus outbreak. (photo : Kuna)

அமைச்சரவை கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் நேற்று குவைத்தில் உள்ளே அநேக மசூதிகளில் தொழுகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று தொழுகைக்காக வரும் மக்களுக்கு KRCS சார்பாக முகக்கவசம், கையுறைகள் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

KRCS-ன் மக்கள் தொடர்பு மற்றும் தகவல்களின் இயக்குனர் காலித் அல் சயீத் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளிகளை மசூதிகளில் சரியாக கடைபிடித்த வழிபாட்டாளர்களை பாராட்டினார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms