குவைத் நாட்டில் வீட்டு‌ வேலைக்கு பெண்கள் தேவை..!

Women need to Kuwait country house work

குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராகப் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலை பணியாளராகப் பணியாற்ற 31 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட 100 பெண் பணியாளா்கள் தேவை என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்த அனுபவம் உள்ளவா்களுக்கு மாத ஊதியம் ரூ. 28 ஆயிரமும், முன் அனுபவம் இல்லாதவா்களுக்கு மாத ஊதியம் ரூ. 25,800-ம் வழங்கப்படும்.

மேலும் உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு ஆகியன பணி அளிப்பவரால் வழங்கப்படும்.

விருப்பமுடையவர்கள், தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்று, செல்லத்தக்க பாஸ்போா்ட் ஆகியவற்றின் நகல்களுடன், புகைப்படத்தையும் இணைத்து மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42 ஆலந்தூா் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை, 32 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-22505886 / 22502267, 8220634389, 9566239685 ஆகிய தொலைத் தொடா்பு எண்களைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது இணையதளம் மூலம் அறியலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தகவல் : தினமணி.