ஊரடங்கு உத்தரவு நேரங்களில், குறிப்பாக மாலை 5:00 மணி முதல் காலை 6:00 மணி வரை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பண்ணைகள் போன்ற இடங்களில் உடற்பயிற்சிப் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (17.04.2020) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுப்பதற்காக அனைத்து குடிமக்களும் குடியிருப்பாளர்களும் குறிப்பாக பகுதிநேர ஊரடங்கு உத்தரவின் போது விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சகத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்தை மீறும் எவராக இருந்தாலும் வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து செயல்படுமாறு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.