குவைத்தில் விசா தொடர்பான விதிமீறல்கள் 180,000-ஐ எட்டி சாதனை

Visa violations in Kuwait
(Photo: Kuwait Listing)

குவைத்தில் விசா தொடர்பான மீறல்கள் புதிய சாதனையை எட்டியுள்ளன, நாட்டில் சுமார் 180,000 வெளிநாட்டவர்கள் முறையான ரெசிடென்சி அனுமதி (residency permits) இல்லாமல் உள்ளனர் என்று அல் ராய் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் சுமார் 38 சதவீத உயர்வை விசா தொடர்பான மீறல்கள் எட்டியுள்ளன, அதாவது மொத்தம் 130,000 பேர் மீறியதாக குறிப்பிட்டுள்ளது.

2020 கடைசி காலாண்டில், சுமார் 83,500 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர்!

விசா மீறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கும் மேலாக, உள்துறை அமைச்சகம் சலுகை வழங்கிய போதிலும், சிலர் மட்டுமே சலுகைக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்கள் நிலையை ஏன் திருத்தவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விதிமீறல்கள் காரணமாக உள்துறை அமைச்சகம் பெரும் சவாலை எதிர்கொள்கிறது.

குவைத்தில் இருவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு!