குவைத்தில் வசிக்கும் இந்தியரா நீங்கள்; கண்டிப்பாக இதை படிக்கவும்..!!

UPDATED ADVISORY RELATED TO COVID -19 from Embassy of India, Kuwait, March 22, 2020.

குவைத்தில் இன்று (23.03.2020) முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்திய தூதரகத்தின் சேவை நேரத்தில் மாற்றங்கள் செய்து சற்றுமுன் இந்திய தூதரக அதிகாரிகளால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட வேலை நேரம் குறித்த விவரம் :

1) இந்திய தூதரகத்தின் வேலை நேரம் காலை 8 முதல் மதியம் 3 வரையில் மாற்றப்பட்டுள்ளது.

2) கிளை அலுவலகங்களின் வேலை நேரம் காலை 08 முதல் மதியம் 12 வரையில் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.