கொரோனா வைரஸ்; குவைத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்..!!

People wearing protective masks wait at a bus station in Kuwait City yesterday amid a global outbreak of the novel coronavirus. (photo : Kuwait Times)

குவைத்தில் புதிதாக 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது, தற்போது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து COVID-19 நோயாளிகளும் நிலையான நிலையில் உள்ளதாகவும் மற்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் Dr. Buthaina Al Mudhaf அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூடுவது குறித்து கல்வி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு பள்ளிகளை திறக்க நீடிப்பு தேவைப்பட்டால் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அமைச்சகம் கல்வி மேற்பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டது.

2019-2020 கல்வியாண்டின் இறுதித் தேர்வுகள் மே மாதம் 31-ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சர் Dr. Saud Al-Harbi அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது ஒரு பிரச்சனை அல்ல, ஆனால் அது சான்றிதழ்களின் அங்கீகாரத்தை பாதிக்கும் அதனால் பள்ளி ஆண்டை நீட்டிப்பது சிறந்த வழி என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆசிரியரும் குணமடையும் வரை இடைநீக்கம் செய்யப்படுவார். மேலும், பற்றாக்குறை ஏற்பட்டால் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

source : Kuwait Times