குவைத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Dr. Abdullah Al-Sanad. (photo : Arab Times)

குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது குவைத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Dr.அப்துல்லா அல்-சனத் அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

source : Arab Times