குவைத்தில் ஊரடங்கின் போது மதுபானத்துடன் சுற்றித்திரிந்த மூன்று இந்தியர்கள் கைது..!!

Three Indians arrested for breaking curfew in kuwait.

வெள்ளிக்கிழமை (03.04.2020) இரவு ஃபர்வானியா பகுதியில் மூன்று இந்தியர்கள் பகுதிநேர ஊரடங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபர்வானியா பகுதியில் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் அவர்கள் சுற்றித் திரிந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மூன்று இந்தியர்களும் ஒரு கட்டிடத்தின் அருகே சுற்றித் திரிவதைக் கண்ட அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று பேரையும் குடியிருப்பு விசாரணைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணையில், அவர்களில் ஒருவர் தனியார் துறையில் வேலைச்செய்பவர், மற்றொருவர் வீட்டுப் பணியாளர் மற்றும் மூன்றாவது நபரிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

source : Arab Times