குவைத்தில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

Third stage of return to normal life from Tuesday, 28th. (image credit : IIK)

குவைத்தில் ஜூலை 28 செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டம் தொடங்குவதாக அமைச்சர்கள் சபை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் சபை ஜூலை 28 செவ்வாய்க்கிழமை முதல் மூன்றாம் கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளதாக அரசு தொடர்பு மையத்தின் தலைவரும் அரசாங்க செய்தித் தொடர்பாளருமான தாரிக் அல் முசாரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டத்தில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்துவிடும் என்றும், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் திறக்க அனுமதிக்கப்படும்.

மேலும், அரசு துறைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் சுமார் 50% ஆக உயர்வு மற்றும் டாக்ஸியில் ஒரு பயத்திற்கு ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms