குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Khaitan பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு தேசிய காவலர்கள் உணவு பொருட்கள் விநியோகம்..!!

The National Guard distributes food baskets to expats in lockdown area of Khaitan. (photo : TimesKuwait)

குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Khaitan பகுதியில் வசிப்பவர்களுக்கு அதன் பொருளாதார சேவைகள் கிளை உணவு கூடைகளை விநியோகித்துள்ளதாக தேசிய காவலரின் நிதி விவகாரங்கள் மற்றும் வளங்கள் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் குழுவின் முடிவின் அடிப்படையில், உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், Khaitan பகுதியை பாதுகாப்பதற்கும் அதன் ஊரடங்கை மேற்பார்வையிடுவதற்கும் தேசிய காவலர் பொறுப்பு வகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி “தேசிய காவலரின் சமூக மற்றும் மனிதாபிமானப் பங்கை நிறைவேற்றுவதற்கும், ஊரடங்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கில் உள்ள பகுதிகளுக்கு தேவையான மற்றும் அடிப்படை பொருட்களைக் கொண்ட உணவு கூடைகளை தேசிய காவலர் சங்கம் தயாரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக Khaitan பகுதியில் சுகாதாரத் தடுப்பு நடவடிக்கைகளை நிலைநிறுத்துவதற்காக தேசிய காவலரால் இந்த உதவியை விநியோகிப்பதாக பிரிகேடியர் ஜெனரல் துவாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.