குவைத்தில் டாக்ஸி கட்டணங்கள் கடும் உயர்வு – பயணிகள் வேதனை

Taxi fares reach sky high: passengers
Taxi fares reach sky high: passengers. (image credit : Arab TImes)

குவைத்தில் பல டாக்ஸி ஓட்டுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை, குறிப்பாக குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் தற்போதைய அறிவுறுத்தல்கள் அவர்களின் வருமானத்திற்கு இடையூறாக இருப்பதாக அல்-சாயாஸா தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

இந்த முடிவுகளால் பெரும்பாலான டாக்ஸி நிறுவனங்கள் மூடிவித்ததாக அல்-சாயாஸா தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கமான கணக்கெடுப்பின் போது, சில ஓட்டுநர்கள் தினசரியாக கொரோனா தொற்றுநோய் அவர்களின் வருமானத்தை பாதித்துள்ளது மற்றும் மீட்டர் முறையை கையாள்வது அவர்களுக்கு கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

மறுபுறம், பல டாக்ஸி ஓட்டுனர்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக பல புகார்களை பயனர்கள் அள்ளித்தூளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, சாக்மியா தீயணைப்பு நிலையத்திலிருந்து நான்காவது ரிங் சாலையில் உள்ள ஒரு கிளினிக்கிற்குச் செல்வதற்கு இரண்டு தினார்கள் டாக்ஸி ஓட்டுனர்கள் வசூலிப்பதாக பயணிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு டாக்ஸி டிரைவர், தனது பெயரைக் கூறாத நிலையில், டாக்சிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும், குறிப்பாக குடும்பங்களுக்கு வரும்போது, ​​குறிப்பாக ஒரு நபர் மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் சென்றால், அந்த நபருடன் துணைக்காக ஒருவர் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms