குவைத்தில் ஒரு பயணத்திற்கு ஒருவர் மட்டும் என்ற முடிவை நீக்குமாறு டாக்ஸி நிறுவனங்கள் கோரிக்கை..!!

Taxi companies urge removal of one passenger rule
Taxi companies urge removal of one passenger rule. (image credit : IIK)

குவைத்தில் பல தனியார் டாக்ஸி நிறுவனங்களின் உரிமையாளர்கள் டாக்ஸியில் ஒரு பயணத்திற்கு ஒருவர் மட்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 70 டாக்ஸி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த முடிவை ரத்து செய்யக் கோரினர், ஏனென்றால் இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

இந்த முடிவால் பெரும் இழப்புகள் ஏற்பட்டு சுமார் 300 நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், டாக்ஸி ஓட்டுனர்கள் பலர் ஏற்கனவே நிதிக் கடமைகள், வாடகைகள், தவணைகள் மற்றும் பிறவற்றை எதிர்கொள்வதால் இந்த முடிவால் பெரும் இழப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

பல டாக்ஸி உரிமையாளர்கள், சட்டவிரோத டாக்ஸி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓட்டுநர்கள் தனியார் கார்களைப் பயன்படுத்துகின்றனர், அதில் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கிற்கு பின்னர் குவைத்தில் டாக்ஸி சேவையை மறுதொடக்கம் செய்வதற்கான அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, டாக்ஸிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை காரில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms