குவைத்தில் நாளை முதல் டாக்ஸியில் மூன்று பேர் பயணிக்க அனுமதி..!!

Taxi can carry up to three passengers from tomorrow
Taxi can carry up to three passengers from tomorrow. (image credit : TimesKuwait)

குவைத்தில் நாளை (ஆகஸ்ட் 20) முதல் டாக்ஸியில் மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க உள்துறை அமைச்சகம் போக்குவரத்துத் துறைகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் இயல்பு நிலைக்கு திட்டத்தின் நான்காம் கட்டமாக பல தளர்வுகளை, குறிப்பாக ஐந்தாம் கட்டத்தில் தளர்வுபடுத்த இருந்த சில வணிக நடவடிக்கைகளை நான்காம் கட்டத்திலேயே மறுதொடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

முதலில், சாதாரண வாழ்க்கைத் திட்டத்திற்கு திரும்புவதன் ஒரு பகுதியாக, டாக்ஸியில் ஒரு பயணத்திற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுருந்தது, இதனால் டாக்ஸி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

மேலும், டாக்ஸி ஓட்டுனர்கள் பலர் ஏற்கனவே நிதிக் கடமைகள், வாடகைகள், தவணைகள் மற்றும் பிறவற்றை எதிர்கொள்வதால் இந்த முடிவால் பெரும் இழப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

இதனால், தொடர்ந்து டாக்ஸி நிறுவனங்கள் ஒன்றிணைத்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவுப்படி, நாளை வியாழக்கிழமை முதல், டாக்ஸி கார்கள் ஒரு பயணத்தில் மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms